பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!
பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!
பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.
உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.
இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?
பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.
உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.
இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?
30 முதல் 60 கோடி ரூபாய் இழப்பு: கமலஹாசன் பேட்டி
வி்ஸ்வரூபம் திரைப்பட விவகாரத்திற்கு தீர்வு காண தமிழக அரசு உதவும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார்.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையில் தனது ரசிகர்களும், திரைப்படத்துறையினரும், ஊடகங்களும் அளித்த ஆதரவைக் கண்டு தான் நெகிழ்ந்து போனதாக தெரிவித்தார்.
இந்தப் பிரச்னையில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கமல்ஹாசன் நன்றி கூறினார்.
விஸ்வரூபம் படப் பிரச்னைகளுக்கு பின்னால் அரசியல் உள்ளது என்றும், படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாததால், 30 முதல் 60 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்திற்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து படத்தை வெளியிட தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, தடைக்கான காரணம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.
தமிழகம் முழுவதும் 524 திரையரங்குகளில் படம் வெளியாக இருந்ததால், அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கொடுப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.
மேலும் படத்தை முழுமையாக தடை செய்ய நினைத்திருந்தால் பட ஒழுங்குமுறை சட்டம் 1955, பிரிவு 7-ன் படி நேரடியாக தடை செய்திருக்க முடியும் என்றும் ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு வேண்டும் என்றே தடை விதித்ததாக கூறப்படுவதை அவர் மறுத்தார். 144 தடை உத்தரவு என்பது 15 நாட்களுக்கான தற்காலிக தடை உத்தரவுதான் என்றும் அதற்குள் நிலைமை சரியாகும் என்ற எண்ணத்துடனேயே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விஸ்வரூபம் படத்திற்கான தொலைக்காட்சி உரிமத்தை குறைந்த விலைக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்காததும், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதுமே அரசின் தடை உத்தரவுக்கு காரணம் என்ற விமர்சிக்கப்படுவதை ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார்.
தமக்கோ, அதிமுகவுக்கோ, அந்த தொலைக்காட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த ஜெயலலிதா, ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.
கமல்ஹாசன் என்ற தனிப்பட்ட ஒருவர் மட்டுமே, பிரதமரை தேர்வு செய்துவிடமுடியாது என்பதால் அவரது பேச்சு குறித்து தாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
விக்ரம் திரைப்பட விவகாரத்தில் கமல்ஹாசனை விமர்சித்து அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதாக கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார்.
கருணாநிதியின் இந்த புகார், அபத்தமான கற்பனை என விளக்கமளித்த ஜெயலலிதா, இதுதொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கருணாநிதியின் குற்றச்சாட்டை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் வழக்கு தொடரப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் திரைப்படங்களை தாம் தடை செய்யாத நிலையில் கமல்ஹாசன் படத்தை மட்டும் தாம் வேண்டுமென்றே தடை செய்ததாக கூறுவது தவறு என்றும் படத்தை வெளியிடுவது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், கமல்ஹாசனும் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டால், படம் வெளியாவதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
கர்ணன் தர்மத்தின் தலைவன்
மகாபாரதத்தின்
மகதுவம் பலருக்கு புரிவதில்லை. இன்று நடப்பதைதான் அன்று ராமாயனத்திலும்
மகாபாரதத்திலும் சொல்லபட்டிருகிறது. என்ன அன்று கடவுள் மனித ரூபம்
எடுத்திருந்தார் இன்று இன்னவும் அவதாரம் எடுத்தாரா இல்லையா என்பது
தெரியவில்லை.நீங்கள் பார்க்கும் ஒவ்வரு படமும் என்ன சொல்கிறது, கெட்டவன்
அழிந்து அல்லது திருந்தி நல்லவனாவது. முன்பு ஒருவன் பாவம் செய்வதும் பிறகு
அவனை கண்டிக ஒருவன் வருவதும்தானே கதை. அதுவே மகாபாரத்திலும் காட்டபடுகிறது.
"தர்மத்தை அதர்மம் சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும்"
எந்த காலத்திலும் தர்மம் அதர்மம் என்று கண்டிப்பாய் இருக்கும்.ஆனால்
கர்ணனை போல் தர்மத்தில் ஒரு கால் அதர்மத்தில் ஒரு கால் வைத்துகொண்டு
சித்திரவதைபடும் குணம் தான் மிக கொடுமையானது.
எனக்கு மகாபாரதத்தில் மிகவும்
பிடித்த கதாபாத்திரம் கர்ணன்தான் காரணம் யார் எது கேட்டாலும்
கொடுத்துவிடும் வள்ளல் அவன் ஆனால் அதுவே அவன் சாக காரணமாய் அமைந்தது.
*கர்ணனை பெற்ற தாய் குந்தியால் புறகணிக்கபட்டபோதே இறப்பின் துவக்கம் ஆரம்பமாகிவிட்டது.* ஒவ்வரு முறையும் கர்ணனின் பிறப்பை பற்றிய சர்ச்சை ஏற்படும் போதெல்லாம் அவமானத்தால் துடித்து போனான்.
* பரசுராமரிடம் அந்தணன் என்று பொய் சொல்லி வித்தை கற்றதால் குருவிடம் சாகும் தருவாயில் பிரமாஸ்திரம் மறந்துபோகட்டும் என்ற சாபம் கர்ணனின் மரணத்தை உறுதிபடுத்தியது.
* இந்திரன் மாறுவேடத்தில் வந்து கவசகுண்டலத்தை பெற்றுக்கொண்டது.
* துரியோதனன் நட்பு தன் உயிரைவிட பெரியதாய் நினைத்தான் ஆனாலும் போர்களத்திலும் புறகணிக்கபட்டன்.
* தாய் குந்திதேவி போருக்கு முன்பு அர்ஜுனனை தவிர யாரையும் கொல்லகூடாது,அர்ஜூனன மீது ஒரு முறைதான் பிரமாஸ்திரம் பயண் படுத்தவேண்டும் என்று வரம் பெற்றது.
* அர்ஜுனனோடு போர் புரியும்போது கர்ணன் விட்ட பிரமாஸ்திரம் கண்ணன் தேர்காலிட்டு அர்ஜுனன்தலைக்கு வந்ததை தலைபாகை போகும்படி செய்தது.
*இறுதியாக கர்ணனை தேர்சக்கரம் குழிக்குள் மாட்ட செய்து அர்ஜுனனால் வஞ்சனையாக அம்புவிடப்படும்போது
கிரிக்கெட்டில் வெளிநாட்டவர் இந்திய தோற்கவேண்டும் ஆனால் சச்சின் அவுட் ஆககூடாது என்பதை போன்ற
மனநிலை ஏற்படுத்துகிறது.
இறுதியாக கர்ணனின் உயிரை தர்மம் காத்துநின்றது. அப்போது கண்ணன் அந்தண உருவு எடுத்து கர்ணனுடைய புண்ணியங்கள் தானம் கேட்கும்போதும்
கூட "நான் இதுவரை பெற்ற புண்ணியங்கள் பெறப்போகும் புண்ணியங்கள் அனைத்தும் தானமளிகிறேன்" என்று கர்ணன் தன் குருதியால் தாரை வார்துகொடுகும்போது அதை
பெற்றுக்கொண்ட கண்ணன் கடவுளின் கைகள் கீலே இறங்கிவிட்டது.தானம் கொடுக்கும் கர்ணன் கைகள் உயர்ந்துவிட்டது. கர்ணன் குருதி கண்ணன் கைகளில் பட்டவுடன் தானம் கேட்கவந்த கண்ணன் வரம் கொடுக்க முன்வந்தான்.
கர்ணனை கொன்றது விதி என்றாலும். கர்ணன் செய்த தானம்தான் இன்று என்னை எழுதவைதிருகிறது.
கர்ணனை போல் நாம் உயிரை தானம் கொடுகவேண்டம். நம்மால் முடிந்த தானத்தை பிறர்க்கு செய்வோமே. அப்படி செய்தல் அது கடவுளுகே போய் சேரும்.கர்ணன் செய்த தானத்தால் அன்று இறந்திருக்கலாம் ஆனால் இன்றும் நம்மால் பேசபடுகிறது.
கர்ணனின் கொடைத்தன்மை
கர்ணனின் கொடைத்தன்மையைச் சொன்ன ஒரு கதை.
சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ணனிடம் யாசகத்திற்குப் போனார் ஒரு அந்தணர். பக்கத்தில் இருந்த தங்கக்காசுகளை இடது கையில் எடுத்து அவரிடம் கொடுத்தானாம் கர்ணன். ‘‘இது அவமரியாதையில்லையோ? இடது கையில் யாசகம் தரலாமா?’’ என்கிறார், அந்தணர்.
பணிவோடு கர்ணன் சொல்கிறான்: ‘‘கொடுக்க வேண்டும் என்று தோன்றியவுடன்
கொடுத்துவிடவேண்டும். சாப்பிட்டு கை கழுவிப் பின் வலது கையால் கொடுக்கலாம்
என்பதற்குள் சில சமயம் மனம் மாறிவிடும். அதனால்தான் உடனே இடக்கையில்
கொடுத்தேன்.’’
சத்திய
வாக்கு இது. ஏழைக் குழந்தைகளின் படிப்பு என்று டொனேஷன் கொடுக்க நினைத்தால்
நினைத்த அதே வினாடி பணத்தைக் கொடுத்து விட வேண்டும். ‘வீட்டுக்குப் போயிட்டு, செக்கைப் போட்டு, மனைவி கிட்டயும் கலந்து பேசிட்டு....’ என்று தள்ளிப் போட்டால் முதலில் ஆயிரம் ரூபாய் என்று நினைத்த மனசு, ‘நானே எல்லாத்தையும் கொடுத்து முடியுமா? இருநூறு போதும்’ என்று மாறிவிடும்.
ராஜராஜசோழன்
மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். ஆனால், உலகத்துக்காக என்ன நல்லதைச் செய்து விட்டுப் போனான்! என்பது தான் முக்கியம்.
ராஜராஜசோழன் சோழநாட்டை என்றோ ஆண்டான். ஆயிரக்கணக்கில் ஆண்டுகள் கழிந்த பிறகும், அவன் பேர் சொல்ல தஞ்சை பெரியகோயில் இருக்கிறது. அவனது மகன் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரத்திலே ஒரு கோயிலைக் கட்டினான். அதுவும் நிலைத்து நிற்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமல்ல, ஏழையாய் இருந்தால் கூட, அவரவர் தகுதிக்கு ஏதோ ஒரு நல்லதைச் செய்யலாம்.
""காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப்பெரிது'
ஞாலத்தின் மாணப்பெரிது'
ஆண்
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்
கள்...
கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்...
தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்.....?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான
படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய
வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் சாக்லெட்டைதன் சகோத,சகோதரிக்காக
தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன்
குடும்பநிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான
அன்பை இரவுகளில் நீண்ட நேரம்
வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை மிக அழகாக உருவாக்குகிறான்.
ஆனால்
ஆனால்
அவர்களுக்காக தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான் .
அவன் தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக எந்தவித குறையும்
சொல்லாமல் தன் இளமையை தியாகம்
செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும் , தன் தாய்,
மனைவி, தன் முதலாளி ஆகியோரின்
திட்டுகள் கேட்க வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும,முதாலாளியும்
அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கின்றன ர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்து கொண்டிருப்பதன் மூலம்
அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில்
ஒவ்வொரு ஆணையும்
மதியுங்கள்.
அவன் உங்களுக்காக என்ன தியாகம்
செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப்
போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள்
கரங்களை நீட்டுங்கள்.
அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும்
மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...
Subscribe to:
Posts (Atom)