சிவகங்கை ராணி


எழுதியவர்: கீதா ரவீந்திரன்
சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது.  படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர்.  அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார்.

Nick D’Aloisio, Founder, Summly



D'Aloisio is only 17-years-old. When he started Summly, he was only 15.
Summly scans the Web for news and uses an algorithm to find the type of content you want to read. Then it summarizes it for you.Yahoo is going to shut down Summly as a stand alone app, but it says it's going to incorporate Summly technology into its own mobile apps and sites.

These Charts About Women In Leadership Prove How Far The U.S. Is Behind The Rest Of The World


Women hold 21 percent of senior management positions globally

Most of the progress women made from 2004-2009 has been undone in recent years

Famous Leadership Quotes:






“Remember the difference between a boss and a leader; a boss says "Go!" - a leader says "Let's go!" -- E. M. Kelly, Author

50 Most Popular Women on the Web, Per Google Search Results






Back to the web's favorite women. Who was left off that you think should have made it? Who were the biggest surprises? Here is the full list:

Top Earners In Direct Sales – February 2013 Update


Estimated $ Earnings per Year (Based on actuals)
Angela Liew and Rayne Ho1. Angela Liew & Rayne Ho – Nu Skin Singapore  $13,200,000Holton Buggs Top Earners Hall Of Fame2. Holton Buggs – Organo Gold USA $13,200,000Dexter Birdie Yager Top Earners Hall Of Fame3. Dexter Yager – Amway USA  $12,000,000Shane Morand Top Earners Hall Of Fame4. Shane Morand – Organo Gold Canada  $12,000,000

Top 30 Richest Internet Entrepreneurs In The World

Rank Website Founders Annual Revenue Per    Second
1 GoogleLarry Page and Sergey Brin$21,800,000,000$691.27
 2 Amazon Jeff Bezos$19,166,000,000$607.75
 3Yahoo Jerry Yang and David Filo $7,200,000,000 $228.31
 4 eBay Pierre Omidyar $6,290,000,000 $199.45
 5 MSN/Live Nathan Myhrvold. $3,214,000,000 $101.92

10 Tips for the Beginning Internet Entrepreneur


For the beginning Internet business entrepreneur, here are 10 unwritten rules that may well prevent you from 'skidding into the ditch'. Make a point of reading through them regularly to remain focused on the road ahead!

வணிகத்தில், நன்னெறி



நாம் எல்லோரும் இங்கு    இருக்கிறோமா என்று பார்போம்? நூறு சதவிதம்?

எதிர்காலத்தை  பற்றிய தவிப்பும் இறந்த காலத்தை பற்றிய வருத்தமும் நிகழ் காலத்தில் இருக்கிறது. இந்த எதிரெதிர் நீரோட்டங்களுக்கு இடையே, எப்படி நம்பிக்கை என்ற ஒளியை துணையாய் கொண்டு படகில் கடந்து மேலே செல்வோம் என்பதே நமக்கு  சவால். மேலும் இப்போது நம் கையில் இருக்கும் நம்பிக்கை என்ற ஒளி ஒரு பெரும் சூறாவளியில் இருக்கிறது. எப்படியாவது இந்த ஒளியை காப்பாற்ற வேண்டும்.

கேள்வி பதில்




கே: யாராவது நம்மைத் வேண்டுமென்றே தூண்டும் போது, அவர்களுக்குப் பாடம் கற்பிக்கலாமா அல்லது விட்டு விடலாமா? நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால் நாம் பலவீனமானவர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதாவது செய்தால், நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றமடையவில்லை என்பார்கள்!

திருமண வாழ்கையின் வெற்றிக்கான ரகசியம்


கே:திருமண வாழ்க்கை வெற்றி அடைய என்ன ரகசியம் உள்ளது?


குருதேவர்: நீ தவறான நபரிடம் கேள்வி கேட்கிறாய் என்று நினைக்கிறேன். ஜெர்மனியில் இருந்து வந்தவர் ஒருவரும், இத்தாலியிலிருந்து வந்த ஒரு பெண்ணும் இங்கு இருந்தார்கள். இருவரும் பல முறை திருமணம் ஆனவர்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி என் வாழ்த்தைப் பெற வந்திருந்தார்கள். குருதேவா! “இந்த முறையாவது எங்கள் திருமணம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள்” என்று வேண்டிக் கேட்டார்கள்.

பணத்தை மதியுங்கள்




தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?

உங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?



இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்கள் மட்டுமே. இறைச்சி என்பது விலங்கு உலகத்திற்கு படைக்கப்பட்டது. இதில் எது சரி. எது தவறு என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சைவ உணவு மட்டுமே மனிதனுக்கு பொருந்திய உணவு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

காய்கறிகள் என்ற மரக்கறிகள் எளிதில் செரிக்க கூடியது. மனித உடலின் இயங்கு மண்டலத்திற்கு தேவையான சக்திகள் அனைத்தும் சைவ உணவில் அதிகமாகவே இருக்கின்றன. இவை மட்டுமே மனித உடலின் செரிமான மண்டலத்திற்கு பொருந்தி போக கூடியவையும் கூட. இருந்தாலும் சில நேரங்களில் மாமிச உணவும் பொருந்தி தான் போகிறது. ஆனால் அளவோடு உண்டால் அது மருந்தாக அமைகிறது.

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு... என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க...


கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில் உடலில் வறட்சி ஏற்படவும் ஆரம்பிக்கும். அப்போது வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தால், தாகம் அதிகரிக்கும். ஆகவே அந்த நேரம் நிறைய தண்ணீர் குடிப்போம். ஆனால் அவ்வாறு எப்போதுமே தண்ணீர் குடிக்க முடியாது. எனவே அப்போது பலர் ஜூஸ் குடிக்க ஆசைப்படுவார்கள். குறிப்பாக கோடைக்காலத்தில் கடைகளில் கார்போனேட் கூல்ட்ரிங்ஸ், ரஸ்னா, சர்பத் போன்றவை விலை மலிவாக கிடைக்கும். எனவே மக்கள் பலர் அதனையே வாங்கி சாப்பிடுவார்கள். அத்தகைய பானங்களில் எந்த ஒரு சத்துக்களும் கிடையாது, நோய்கள் தான் உள்ளன. ஆகவே உடலை ஆரோக்கியமாகவும், நோயில்லாதாகவும் வைப்பதற்கு பழங்களை வைத்து ஜூஸ் குடித்தால் நல்லது. இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, உடலும் நன்கு வலுவோடு இருக்கும். மேலும் பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன என்பது நன்கு தெரியும். ஆனால் அவற்றில் சத்துக்கள் மட்டுமின்றி, வயிற்றையும் நிறையச் செய்யும். சரி, இப்போது எந்த பழ ஜூஸில் என்ன நன்மைகள் நிறைந்துள்ளன...........



ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைய உள்ளது. ஆகவே மூட்டு வலிகள், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

பாத வறட்சி அழகைக் கெடுக்குதா? கவலையவிடுங்க...




அனைத்துப் பெண்களுமே அனைத்து விதத்திலும் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று, கூந்தல், சருமம் என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பணம் செலவழித்து பராமரிப்பார்கள். இவ்வாறு செய்வதால், பையில் உள்ள பணம் தான் கரையுமே தவிர, அதற்கான முழு நன்மைகளையும் பெற முடியாது. சொல்லப்போனால், அத்தகைய பராமரிப்புகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் இருக்குமே தவிர, சீக்கிரம் போய்விடும். குறிப்பாக இத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களை உடலில் பயன்படுத்தும் போது, வறட்சி, அரிப்புகள், சிலசமயங்களில் வெடிப்புகள் போன்றவை ஏற்படும். அதிலும் கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், பாதங்கள் விரைவில் வறட்சியடைந்து, குதிகால் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வலி ஏற்படுவதோடு, வெடிப்புக்கள் வந்த இடம் பொலிவின்றி, கடினமாக இருக்கும். எனவே இதனை போக்குவதற்கு சிறந்த வழி என்னவென்றால், அது இயற்கை முறைகள் தான். அத்தகைய இயற்கை முறைகளில், வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பராமரிப்பதால், எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, அதன் நன்மையானது நீண்ட நாட்களும் இருக்கும். சரி, இப்போது பாதங்களில் உள்ள வெடிப்புகளையும், வறட்சியையும் நீக்குவதற்கு எந்த பொருட்களை, எப்படி பயன்படுத்த வேண்டும்

மோனாலிசா ஓவியத்தைப் பற்றிய சில இரகசியங்கள்!!!


உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில், தற்போது இந்த ஓவியம் உள்ளது. இந்த புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தவர் பெயர் தான் லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci). இந்த ஓவியத்தின் இரகசியமானது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. ஆனால் இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. மேலும் அதிகம் விற்பனையாகியுள்ள, இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது. அவற்றில் எழுந்த சில


மோனாலிசா யார்? வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசா, ப்னோரென்டைன் எனப்வரின் மனைவி. இவரது உண்மையான பெயர் லிசா டெல் ஜியோண்டா. ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மூக்கில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கா? ஈஸியா போக்கலாம்!!!




சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள். பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, சருமத்தில் அழுக்குகள், தூசிகள் போன்றவை படும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன. சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன. இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இத்தகைய பிரச்சனையே போக்குவதற்கு நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் இல்லை. ஆகவே இந்த பிரச்சனைக்கு இயற்கை முறை தான் ஒரே வழி. அதுமட்டுமின்றி ஒருசில செயல்களை அவ்வப்போது செய்து வர வேண்டும். சரி, இப்போது மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்




1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.

திருமணத்தில் அழகான மாப்பிள்ளையாக ஜொலிக்க வேண்டுமா?




திருமணம் என்று சொன்னாலே ஒருவித மாற்றம் முகத்தில் தெரியும். குறிப்பாக பெண்களுக்கு நன்கு தெரியும். எனவே பெண்கள் திருமணத்தன்று இன்னும் அழகாக காணப்பட அழகு நிலையங்களுக்கு சென்று, நிறைய பராமரிப்புகளை மேற்கொள்வார்கள். இத்தகைய அழகு பெண்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆண்களுக்கு இல்லையா என்ன? ஆகவே திருமணத்தன்று பெண்களை விட அழகாக காணப்படுவதற்கு, ஒருசில பராமரிப்புகள் என்று சொல்வதை விட, செயல்களை தினமும் செய்து வந்தால், நிச்சயம் அழகாக ஜொலிக்க முடியும். பொதுவாக அழகு என்று சொன்னால், பெண்கள் சொல்லப்படுவதற்கு காரணம், பெண்கள் அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். எனவே தான், அவர்கள் திருமணத்தன்று மிகவும் அழகாக காணப்படுகின்றனர். ஆனால் ஆண்கள் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால், சில ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் முகப்பருக்களால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பருக்கள் திருமணத்தன்று இருந்தால் நன்றாக இருக்குமா? இருக்காது அல்லவா! எனவே திருமணத்தன்று முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, ஆண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும்




உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஆனால்அதை செயல்படுத்த முயல்வது ஒரு சிலரே . அதிலும் அதை செயல் படுத்துவது மிகச் சிலரே. 
பல முறை முயன்று பார்த்துள்ள ,என் அனுபவத்தில் இருந்து சில சில்லறை யோசனைகள். 
1. உடற்பயிற்சியை புதியதாய் துவக்குபவராய் இருந்தால் , குறைவான நேரமே செய்ய முயலுங்கள். முதல் நாளே நானும் செய்தேன் என்று ஒரு மணி நேரம் செய்தால், அடுத்த நாள் உங்களுக்கு நீங்களே பொய் சாக்கு சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்.
கொஞ்சம் கொஞ்சமாய் செய்யும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதைத்தான் உடம்பும் ஏற்றுக் கொள்ளும்
2. துணைக்கு யாரேனும் கிடைத்தால் நல்லது .இருவர் சேர்ந்து செய்யும் போது அதில் ஆர்வம் ஏற்படுகிறது. கிடைக்கவில்லை என்றால் அதைவிட நல்லது. 
அவர்களின் காரணமாய் சோம்பல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. அவர்கள் வரவில்லை ,அதனால் நாளை செய்துக் கொள்ளலாம் , என்று தள்ளிப் போட வேண்டி இருப்பதில்லை.
3. நல்ல இசையை கேட்டுக் கொண்டே செய்தால் போரடிக்காது. ' வாக் மேனை ' காதில் மாட்டிக்கொண்டு வானொலி கேட்கலாம். 
4.உடலை அதிகம் வருத்திக் கொள்ளாமல் பயிற்சி செய்வது முக்கியம். பயிற்சியை தொடர்ந்து செய்ய இது வழி வகுக்கும்.
5.கஷ்டப்பட்டு ஒரு மாதம் செய்து விடுங்கள் .அது ஒரு பழக்கமாக மாறிவிடும். மூன்று மாதங்கள் செய்துவிட்டீர்கள் என்றால் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம்,  உங்களைத் தொடர்ந்து செய்யத் தூண்டும். ஒரு நாள் செய்யாவிட்டாலும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு , உங்களை பயிற்சி செய்ய வைக்கும் .
நீங்கள் சாதனை படைக்க வேண்டுமா?
குட்டி போட்ட பூனை போல அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி தொடர்ந்து சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமா? ஒரே பதில் உடற்பயிற்சி செய்யுங்கள்!
உடற்பயிற்சி செய்வதால் உடல்நலம் சீராகிறது என்பதுடன் மூளையும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது என்பதுதான் புதிய கண்டுபிடிப்பு.
தினமும் உடற்பயிற்சி செய்தால் மூளையின் தசைநார்கள் சுண்டி விடப்பட்டு நன்கு இயங்குகின்றன. இதனால் சுறுசுறுப்புடன் சிந்தித்து அதே ஆர்வத்துடன் வேலையும் செய்ய முடிகிறது.
அதிகபட்சம் தினம் முப்பது நிமிடங்கள் செய்ததுமே மூளைக்கு வெள்ளம்போல் ஆக்ஸிஜனும் குளுகோஸும் பாய்ந்து விடுகின்றன. இதனால் நமது மூளை ஆற்றல் குறையாமல் உச்சநிலையில் செயல்படுகிறது.
மனிதனின் மூளையில் உள்ள செல்கள் முப்பது வயது ஆரம்பமானதும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைய ஆரம்பிக்கிறது. இதனால் அடுத்த பத்தாண்டுகளில் மனிதனது வேலைகளில் மந்தம் ஞாபகமறதி தரக்குறைவு முதலியன ஏற்பட்டு வருகின்றன. பிரச்னைகளைத் தீர்க்க சிந்திக்கவோ திறமையாகச் செயல்படமோ இயலாமல் போய்விடுகின்றன.
ஆனால் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையில் அடைபட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயல்கள் விடுவிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் எப்போதும் போலச் சிந்தித்து சுறுசுறுப்பாக வாழ மூளை நன்கு செயல்பட உதவுகிறோம். எளிய உடற்பயிற்சியே இந்த மூளை ஆற்றலுக்கு ஊட்டம் தரும் சத்துணவு.
மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் பிராட் ஹாட்ஃபீல்டு என்பவர் உடற்பயிற்சியின் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மனமும் மூளையும் மிக விழிப்புணர்வுடன் இருக்கும். ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் நிரம்பிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். வேலை பார்ப்பவர்கள் கூட விடாமுயற்சியுடன் வேலை பார்ப்பார்கள் என்பதைகண்டு பிடித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வதால் டென்ஷனான பிரச்னையின் போதும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது என்று உடற்பயிற்சியைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளவர்கள் இவரிடம் கூறினார்கள்.
40 - 50 வயதுக் கார் டிரைவர்கள் சற்றுத்தள்ளியே வேகமாகச் சென்று தங்கள் கார்களை நிறுத்துவார்கள். இதற்குக் காரணம்இ உடற்பயிற்சியால் ஏற்பட்ட விழிப்புணர்வுதான். மூளையின் செல்கள் தடைப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட டிரைவர் ஸ்டாப்பின் முன்பே 20 அடி பின்னால் தள்ளித்தான் நிறுத்துவார். வீட்டு டிரைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடைசி நேரத்தில் ஓட்டி சரியாக வாசலில் நிறுத்துவார்கள். உடற்பயிற்சி செய்பவர் என்றால் வழக்கம் போல் ‘சர்’ரென்று வந்து வாசல் எதிரில் சரியாக நிறுத்துவார். இதுவும் இவர் கண்டுபிடித்தவையே.
உடற்பயிற்சி செய்வதால் மூளை சுறுசுறுப்பாக- திறமையாகச் செயல்படும் என்பதை எலிகளை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர். ஒரே இடத்தில் வைக்கப்பட்ட எலிகளையும் அங்குமிங்கும் ஓடியபடியே இருக்கும்படியாகச் சில எலிகளைப் பழக்கியும் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்கள்
ஓடி விளையாட பயிற்சி கொடுக்கப்பட்ட எலிகளின் மூளையில் மூளை செயல்படத் தூண்டும் டாப்மைன் என்ற இரசாயனப் பொருள் நன்கு சுரந்திருந்தது. ஞாபக சக்தியைத்தரும் பலவிதமான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி சீராக்கி ஒரு முகச்சிந்தனையைத் தூண்டும். 
மனிதர்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த மூன்று பொருட்களும் தங்கு தடையின்றி உற்பத்தியாகி எந்த வயதிலும் திறமையுடன் வாழமுடியும்.
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பேராவலுடன் உள்ளவர்கள் நடைப்பயிற்சி உடற்பயிற்சி நீச்சல் என்று இதில் எந்த ஒன்றைப் பின்பற்றினாலும் தினம் அரைமணி நேரம் டென்னிஸ் பயிற்சியும் பெறுங்கள். உங்களுக்குத் தேவையான விழிப்புணர்வு செயல் வேகம் என அனைத்தையும் டென்னிஸ் பயிற்சியின் மூலம் பெற்றுவிடலாம் என்று டாக்டர் பி. ஹாட்ஃபீல்டு கூறுகிறார். அந்த அளவிற்கு டென்னிஸ் பயிற்சி மூளைக்கு வல்லமை அளிக்கிறதாம். ஆக வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் மூளையைத் துருப்பிடிக்க முடியாமல் செய்ய உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்போம்.
நன்றி: துரை

தினம் ஒரு கரட்



பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப் போல தினம் ஒரு கரட் உண்பவர்களின் உடலும் தகதகவென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு கரட் அழைக்கப்படுகிறது.
காய்கறிகள்  அதிகமான சத்துகளும், விட்டமின்களும் நிறைந்தவை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததே, காய்கறி வகைகளில் ஒன்றான கரட் எல்லோரும் சாப்பிடுவதுண்டு. பச்சையாகவும் சாப்பிடுவர். மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் காணப்படும். எந்த வகை நோயாளர்களுக்கும் உகந்தது 
இது ஒரு கிழங்கு வகையாகும். மஞ்சள் முள்ளங்கி என்றும் கரட்டை அழைப்பர். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காணப்பட்டக காட்டுக் கரட்டிலிருந்தே மஞ்சள் முள்ளங்கி தோன்றியது என்கிறார்கள் . கரட்டை பச்சையாகவும் உண்ணலாம் . கரட்டை சம்பல் போட்டும் உண்ணலாம். வறை வறுத்தும் சாப்பிடலாம். கோவாவுடன் சேர்த்து கரட்டை வெள்ளை கறியாக சமைத்தும் உண்ணலாம் .
கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச் சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு கரட்டிற்கு மட்டுமே உள்ளது. 
இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்றுநோய் செல்களை கட்டுப் படுத்துகிறது.
கரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது.
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் கரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண் நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி கரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் கரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது.
ஏனெனில் கரட்டில் உள்ள நார்ச்சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.
பக்கவாதத்தை அண்டவிடாது, கரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் கரட்டினை உண்பவர்களை ஸ்ட்ராக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப் பார்ப்பதில்லை. கரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கறைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு கரட் போக்கிவிடும்.
பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது. அல்சர் நோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் கரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் வராது.

ஆரோக்கியத்தை பேண உருளைக்கிழங்கு!


எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.

இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர….
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!

வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவீடாதீர்கள்.
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு! எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும்.

குண்டானவர்களை மேலும் குண்டாகிவிடும்!
எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.

(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.
மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே. இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கல்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியனவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.

ஒரு மனிதன் தினமும் பாலும் உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்போஹைடிரேட்டுகள் மாவுப்பொருளும் சர்க்கரையும் உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப் பயன்படும் காய்கறி இதுதான்.

மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறு வகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்குவடோர் நாடு வரை ஆய்வுப் பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக் கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பரவியது.

அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிக முக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப் பார்க்கலாம்.

சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக் கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும் மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.

உருளைக் கிழங்கைச்சாப்பிட்டதும், அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குபடுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.

சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2 கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச் சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக் கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது இரவில் திடீர் திடீர் என்று பசியினால் அலறாது நிம்மதியாகத் தூங்கும்.

அரிசி, கோதுமை, சவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும் போ,து அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்த நிலையில்தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப்பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில கிடைக்கிறது.

உருளைக் கிழங்கில் தோலுக்கு அருகில்தான் அதிக அளவு ஊட்டச்சத்தும், புரதச்சத்தும், தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.

உருளைக் கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினி¨யைத் தவிர்த்துக், கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சக்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால் தான் பசியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது.

வாயுப் பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்ற வகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்


இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1. ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

2. தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3. தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

4. அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள்.

உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

5. வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள  கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்)  தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7. தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

8. அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

9. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் (கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்), மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள் (கோக், பெப்ஸி)  மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.

ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி)

காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் )அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் – 1 (அ) 2 டம்ளர்.

நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்)

மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)

மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு

இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ) காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா (காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.

படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர்.

இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

சைவ உணவு மாரடைப்பை குறைக்கும்


ஜாதகம் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள் ஜோதிடர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வது பொய்த்தும் போகலாம்.
ஆனால் ஒரு மனிதனின் உடலில் உள்ள மரபணுவில் (ஜீன்) பதிவாகி இருக்கும் தகவல்கள் பொய்த்துப்போகாது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.
அதாவது, ஒருவரின் மரபணுக்கள் அவரது பெற்றோர் மூலம் தலைமுறை தலைமுறையாக வருவதாகும். தாத்தா - தந்தை - மகன் என்று தலைமுறை தகவல்கள் மரபணுக்களில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருக்கும். தந்தைக்கு இருதய நோய் இருந்தால் அது மகனுக்கும் வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.
இவ்வாறு ஒருவரின் மரபணு மூலம் அவருக்கு வரும் நோய்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிந்தபோதிலும், அந்த மரபணுவின் தன்மையை மாற்ற முடியாத நிலை காணப்பட்டது. இப்போது, நடந்த ஆய்வின் மூலம் இதற்கு ஒரு தீர்வை கண்டுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
ஒருவருக்கு இருதய நோய் அல்லது மாரடைப்பு வரும் ஆபத்தை குறிக்கும் வகையில் உள்ள மரபணுவின் பெயர் 9பி21 (9ஜீ21) என்பதாகும். ஒருவரின் மரபணுவில் இந்த 9பி21 இருந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் ஆபத்து மிக அதிகம் என்பார்கள்.
ஆனால், இதை உணவுப்பழக்கம் மூலம் மாற்ற முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் மெக்கில் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஜாமி என்கர்ட் மற்றும் மெக் மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி சோனியா ஆனந்த்.
இந்த ஆய்வுக்காக இவர்கள் 9பி21 மரபணு உள்ள ஐரோப்பா, தெற்கு ஆசியா, சீனா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர்களை சோதனைக்கு எடுத்துக்கொண்டனர்.
இவர்களுக்கு முழுக்க முழுக்க சைவ உணவுகள் மற்றும் பழங்கள் கொண்ட உணவுகளை கொடுத்தனர். இவர்களது உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இது தவிர அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் கொடுக்கப்படவில்லை. வழக்கமான தங்கள் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கச் செய்தனர்.
வித்தியாசமாக இந்த முறையின் மூலம் சைவ உணவுகளை சாப்பிட்டவர்களின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களின் உடலில் மாரடைப்பை ஏற்படுத்தும் மரபணுவின் தன்மை படிப்படியாக மாறியது. இவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து குறைந்தது. அல்லது முற்றிலுமாக நீங்கியது என்று சொல்லும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்த மாற்றங்கள் ஏற்பட சைவ உணவுகள் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் ஆய்வில் தெரியவந்தது.

உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கும் அக்ரூட்


உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்(Eating Walnuts) முக்கிய இடம் வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உட்பட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு.

உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.

இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தெரிவு செய்யப்பட்டனர்.

முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் முந்திரி, பாதாம் உட்பட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது.

குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பது தான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
நன்றி :யோகன் 

யோகாசன ஆரம்பப் பயிற்சியும் ஆசனங்கள் செய்யும் படிமுறைகளும்


1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு  குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணித்தியாலங்களின் பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர்
அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணித்தியாலங்களின் பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும்.
3. ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.
4. உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்கள் சிரசாசனம் செய்யக் கூடாதென தற்போது யோகிகள் கூறுகிறார்கள்.
5. ஆசனங்கள் செய்யும் போது ஒரு ஆசனத்துக்கு அடுத்து அதற்கான மாற்று ஆசனம் செய்தே அடுத்த ஆசனத்தைச் செய்தல் வேண்டும். ஆசனங்களுக்கிடையில் சாந்தியாசனம் செய்து ஓய்வு எடுத்தல் வேண்டும். 
6. ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.
7. ஆசனங்களை மிக இலகுவாகச் செய்தல் வேண்டும். உடல் வளைந்து கொடுக்காதவிடத்து வலுக்கட்டாயமாகச் செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்தல் வேண்டும்.
8. ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.
9. இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து , 2-20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.
10. ஆசனங்களை செய்ய முடியாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் காலையும்,மாலையும் 2-20 நிமிடங்கள் சாதாரண நிலையில் அமர்ந்து அல்லது கதிரையில் அமர்ந்தபடி தியானம் செய்வது நல்ல பயனளிக்கும். இதுவும் இயலாதவர்கள் சாப்பிடும்போது நிலத்தில் சப்பாணி கொட்டி இருந்து சாப்பிட்டாலே போதுமாகும். இதுவுமியலாதவர் 20நிமிடங்கள் நடப்பது நன்மை பயக்கும்.
சிவானந்தம். சி நோர்வே

யோகா பயிற்சியி மூலம் உடல் மற்றும் மனதில் புத்துணர்ச்சியும் கட்டுக்கோப்பும் ஏற்படுத்த முடியும்.

* யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.

* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.

* நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.

* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

* யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம்.

குழந்தைகள்: குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை நுரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப்பைகளும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இவர்களுக்கு மார்புச்சளி, பசியின்மை, ஆஸ்துமா, செரியாமை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்படலாம்.

செய்ய வேண்டிய பயிற்சி:- 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வளர் இளம்பருவம்:- 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர வேண்டிய முக்கியமான பருவம். இளமை:- 20 முதல் 30 வயது வரையான பருவம் இளம் பருவம். என்றாலும் இதுதான் முதுமையின் தொடக்கமும் கூட.

பயிற்சிகள்:- பின்னால் வளைந்து செய்யும் ஆசனங்களை செய்ய வேண்டும். இதனால் முதுகுத்தண்டு பலம் பெறும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும்.
பின் இளமை:- 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமையை இழக்கத் தொடங்கும். புருவங்களுக்கு மத்தியில் சுருக்கம் தோன்றும்.

பயிற்சி:- யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை தொடர்ந்து வர வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம்.

முதுமையின் தொடக்கம்:- 40 முதல் 50 வயதிற்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். பயிற்சி:- தவறாது யோகாசனங்கள் செய்து வர வேண்டும். பெண்களும் யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம்.

முதுமை:- 50 வயதுக்கு மேல் பெரும்பாலானவர்களின் உடல் வியாதிகளின் சங்கமமாக மாறிவிடும். காதுகள் கேட்கும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும். இதய நோய்கள் அதிகரிக்கும். எலும்பு முறிவு, சளி பிடித்தல் போன்ற கோளாறுகள் தோன்ற ஆரம்பிக்கும். பயிற்சி:- தினம் தவறாது விபரீதகாரணி, பத்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். சிறு வயது முதலே யோகாசனம் செய்து வந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.


சூர்ய நமஸ்காரம்
ஆசனம் செய்யும் முறைகள்

பயிற்சி-1
முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக் கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி (வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.

பயிற்சி-2
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால் வளைக்கவும்

பயிற்சி -3
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக் குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.
கவனம் - மூட்டுக்களோ, கைகளோ சற்றும் வளையலாகாது.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.

பயிற்சி-4
 
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே) இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால் மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல் நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல் மார்பை உயர்த்தி முதுகையும், கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.பார்வை நேராக இருக்கட்டும்.

பயிற்சி-5
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக் சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை மட்டும் அப்படியே வைத்திருக்கவும். முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு மேலே தூக்கி நிற்க, உள்ளங் கையையும் ,பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.

பயிற்சி-6
 
அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும் சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும் தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும். இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.

பயிற்சி-7
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும். தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும். உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும், முழங்காலிலும் படும்படி அமைக்கவும்

பயிற்சி-8
 
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த வரை மேலே உயர்த்திடுங்கள். அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க. தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள். முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது. இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இரு நொடிகள் இந்நிலையில் (முக்கோணம் போல) நிற்கவும்

பயிற்சி-9
 
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள். வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்) நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்) வைத்திருக்க வேண்டும்.

பயிற்சி-10
 
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும். இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.

பயிற்சி-11
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய நிலையில் நின்று கொண்டு, முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும். தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம். பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.

பயிற்சி-12
 
கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும் கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும். பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும். இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல், தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல் என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப் பயனும் கிட்டும்.

இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.

இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும் முறைகள் முக்கியம். கவனித்து செய்யுங்கள்.

பலன்கள்:-
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?
மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.

நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
 

அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப் படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.

நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப் பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும் மனிதனை அண்டவே அண்டாது


பத்மாசனம்
ஆசனம் செய்யும் முறைகள்
பத்மாசனம் யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பிராணயாமம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.

பத்மம் என்றால் தாமரை என்று பொருள். உட்கட்டாசனம் செய்து முடித்த பின் மெதுவாக தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கால்களையும் தளர்த்தி விட்ட பிறகு சிறிது நேரம் கழித்து வலது காலை நீட்டி மடித்து இடது தொடையின் மேலே வையுங்கள். அதேப் போல இடது காலை வலது தொடை யின் மேலே வைக்கவும்.
 

இப்போது கண்கள் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். குருவை வணக்கம் செய்யும் பாடலையும், இஷ்ட தெய்வத்தை துதி செய்யும் பாடலையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். இதனால் சக்தி கூடும். பின்பு கண்களை மூடி உள்பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். சில பேருக்கு இவ்வாசனம் எளிதில் வராது. ஆனால் பழகி விட்டால் நாடளை வில் வந்து விடும்.

இந்த ஆசனம் செய்யும் போது முதுகு நேராக நிற்க வேண்டும். கூனல் போடக் கூடாது. இரண்டு குதிகால் களும் அடிவயிற்றை நன்றாக தொட வேண்டும். கை விரல்கள் சின் முத்திரையை காட்டியபடி இரு முழங் கால்களின் மீது நேராக வைக்கவும். 3 தடவை உள்ளே மூச்சிழுத்து வெளிவிடுக.
 

ஆரம்பத்தில் 2 நிமிடம் செய்தால் போதும். பத்மாசனம் பிராணாயாம் செய்வதற்கு சிறந்தது. பல யோகிகள் பத்மாசனத்தில் அமர்ந்து 1 மணி நேரம் வரை மூச்சை உள்ளிழுத்து தியானம் செய்வர். அந்தளவுக்கு சென்று விட்டால் இந்த உலகையே நாம் வென்று விட முடியும்.
 

பத்மாசனம் பழகும்போது லேசான வலி ஏற்படலாம். வலி வந்தால் உடனே ஆசனத்தை கலைத்து விட வேண்டும். வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாக ஆசனத்தை செய்யக் கூடாது.
 

பலன்கள்
 
பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை இனி பார்க்கலாம்.

1. அடிவயிற்று பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக கிடைக்கிறது.
 

2. நன்றாக பசி எடுக்கும்.
 

3. வாத நோய்கள் பறந்தோடும்.
 

4. நுரையீரல்களின் இயக்கம் துரிதப்படுத்தப்படுவதால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் எட்டி பார்க்காது.
 

5. முழங்கால் மூட்டு நோய்கள் போய் சுறுசுறுப்பு வரும்.
 

6. தொடை, குதி கால்கள் இவற்றின் நரம்புகள் நல்ல வலிமையை அடைய இவ்வாசனமே சிறந்தது.
 

7. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 

தவறான முறை
 
சிலர் இந்த ஆசனத்தை செய்யும் போது குனிவார்கள். இது தவறு. முதுகும், கைகளும் விறைப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். தொடைகளின் மேல் குதிகால் நன்றாக அழுந்த வேண்டும். மேலும் 3 முறையாவது மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட வேண்டும். இது முக்கியம்.



யோக முத்திரை

பத்மாசனத்தில் அமர்வது போல அதே நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்பு இரண்டு கைகளையும் முதுகுப்புறமாக பின்புறம் கொண்டு வந்து கையின் மணிக்கட்டு பகுதியை இடது கையால் (இறுகப் பிடிக்காமல்) லேசாகப் பற்றிக் கொண்டே மெதுவாக முன்பக்கமாக குனிய வேண்டும்.

நன்கு குனிந்து, தலையின் உச்சி தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். ஆரம்பத்தில் தரையை தொட முடியாவிட்டால் சிரமப்பட வேண்டாம். முரட்டுத்தனம் வேண்டாம். நாளடைவில் சரியாகி விடும். தரைதொட்ட அந்த நிலையில் சற்றே இழுத்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே நிமிர்ந்து மீண்டும் பத்மாசன நிலைக்கு வந்து (பிணைக்கப்பட்ட கைகளை ஒருபோதும் விலக்கக் கூடாது) மெதுவாகப் பின்னர் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்பு சொன்னது போல தரையை நோக்கி குனிய வேண்டும். இவ்வாறு மூன்று தடவைகள் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நிமிட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
நிமிர்ந்து வரும்போது மூச்சை நன்றாக உள்ளே இழுப்பதும், மீண்டும் குனிந்து கொண்டே வருகையில் தாரளமாய் மூச்சை வெளியே விடுவதும் மிக மிக அவசியம். அதுவே நுரையீரல் நன்கு விரியக் காரணமாகி, வலிமை கொடுக்கும்.

பலன்கள்:
 
ஜீரண உறுப்புகள் பலமடைகின்றன. அதனால் அவற்றின் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக நடை பெறுகின்றன.

குடலின் இயக்கம் சீராகிறது.
 

வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் ஓடிவிடும்.
 

இந்த ஆசனம் நீடித்த மலச்சிக்கல் நோய் உள்ளவர் களை விரைவில் குணப்படுத்தி விடும்.
 

இடுப்பும், வயிற்றுப் பாகமும் அழகான அமைப்பை பெற்றிடும்.
 

நுரையீரல் நோயே வராது.
 

முக்கியமாக ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
 

4.  ஷலபாசனம்
ஷலபாசனம் என்பதற்கு தாமரை நிலை என்று கூற‌ப்படு‌கிறது. பஷ்சிமோத்தாசனம் மற்றும் ஹாலசனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை நிலை என்று சுருக்கமாக அழைக்கலாம்.
செய்யும் முறை : 
அர்த ஷலபாசனத்தை துவங்க, முதலில் தரையில் குப்புறப்படுக்க வேண்டும். அடிவயிறு, மார்பு, மற்றும் முகவாய்க்கட்டை தரையில் படுமாறு இருக்க வேண்டும். கைகள் தரையில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கி பார்த்தபடி இருக்க வேண்டும்.
மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும். 10 வினாடிகளுக்கு‌ள் மூச்சு உள்ளிழுத்தலை நிறைவு செய்யவும்.
மூச்சை முழுதும் உள்ளிழுக்க வே‌ண்டாம். ஏனெனில் கால்களை மேலே தூக்கும்போது அது இடையூறாக இருக்கும். ஏனெனில் நீங்கள் இந்த ஆசனத்தை மூச்சை ‌நிறு‌த்‌தி செய்து முடிக்க வேண்டும். 
கா‌ல்களை மு‌ட்டியை மடி‌க்காம‌ல் பூமியிலிருந்து 40 டிகிரிக்கு உயர்த்த வேண்டும். கா‌ல்களை உயர்த்தி சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கைகள் இருக்கவும். மேலே தூக்கிய கால்கள் மெதுவே கீழே இறக்கப்படும் வரை மூச்சை முழுதும் வெளியே விட வேண்டாம்.
இர‌ண்டு கா‌ல்களையு‌ம் ‌வி‌ரி‌ப்‌பி‌ன்‌‌மீ‌து கொ‌ண்டு வரு‌ம் போது மூ‌ச்சை ‌விடவு‌ம். இதுபோல் இரண்டு முறை செய்ய வேண்டும். 
கா‌ல்களை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் ‌மீ‌து வை‌க்கு‌ம் போது ‌நீ‌ங்க‌ள் காலை தூ‌க்கு‌ம் போது எ‌‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌ந்ததோ அதே இட‌த்‌தி‌ற்கு ‌மீ‌ண்டு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌பி‌ன்ன‌ர் சவாசன ‌நிலை‌க்கு‌ப் போகலா‌ம். 
பலன்கள் :
நீரிழிவு நோய்க்கு அதிக பலன் தரும், நுரையீரலின் வலிமையை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமா நோய்க்கு மிகவும் நல்லது. அடி முதுகு வலியை போக்கும். அஜீரணத்தை போக்கி செரிமானத்தை சரியாக்கி கல்லீரல், மண்ணீரல் பலம் பெறுகிறது.
பகலில் தூக்கம் வருவதை தடுக்கிறது. சிறுநீர் கடுப்பு நோய்க்கு நல்ல பலனைத் தருகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை சரியான விகிதாச்சாரத்தில் இருக்க உதவுவதுடன் இரத்த ஓட்டத்தையும் சரி செய்கிறது. 
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரைப்பை புண், குடல் புண், ஆஸ்துமா, இருதய பலவீனம், உதர விதான இறக்கம் ஆகிய குறைபாடுகள் ஏற்படுவதில்லை. 
அதனால் நுரையீரலை பலப்படுத்துகிறது. அதனால் நுரையீரல் நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களுக்கு அதிக பலனைத் தருகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
கூன் முதுகை நிமிர்த்துகிறது. தூக்கமின்மை வியாதியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. சோம்பல், ஞாபக மறதி, கவனமின்மை ஆகியவற்றை போக்கிவிடும்.
அஜீரணம், பசியின்மை, உடல் சோர்வு மற்றும் மார்பு சளி ஆகியவை இந்த ஆசனத்தை தவறாது செய்ய பழகினால் தீரும்.
பிரசவித்தபின் ஏற்படும் பெருத்த வயிற்றை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.

5.  சோமாசனம்
1.பத்மாசனம் செய்யும் நிலையிலிருந்து இந்த ஆசனம் செய்தல் வேண்டும்.
2.விரிப்பில் கால்களை நீட்டி அமர வேண்டும் .இடது காலை மடித்து வலது பக்கத் தொடை எலும்பைக் குதிகால் தொடும் வண்ணம் உட்காரவேண்டும்.
3.வலது காலை மடித்து இடது பக்கத் தொடை எலும்பை குதிகால் தொட்டிருக்குமாறு வைக்க வேண்டும்.அதே நேரத்தில் வலப்பாதம் இடத் தொடைக் கெண்டைக் காலுக்கு இடைப்பகுதியிலும்,இடது பாதம்,வலது தொடைக் கெண்டைக் காலுக்கு இடைப் பகுதியிலும் இருக்குமாறு வைக்க வேண்டும்.
4.இருகுதிக் கால்களும் சேரும் இடத்தில் வலப் பக்க உள்ளங்கை மேலே இடப் புறங்கையை வைக்க வேண்டும்.சாதரண சுவாசத்தில் ௩௦ விநாடிகள் இருக்க வேண்டும்.
5.கைகளை எடுத்து வலது காலை நீட்டு.
6.இடது காலை நீட்டு,ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
பலன்கள்:
1.முழங்கால் வலிமை பெறுகிறது.
2.குதிகால்களின் நரம்புகள் தொடைப் பகுதிகள் சக்தி பெறுகின்றன.
3.நுரையீரல் செயல்பாடு சீராகின்றது.
4.முழங்கால் மூட்டின் வலி குறைகிறது.

6.  தடாசனம்
சமஸ்கிருத மொழியில் தடா என்றால் குன்று (சிறிய மலை) என்று அர்த்தம். இந்த தடாசனம், சமஸ்திதி ஆசனம் என்றும் அறியப்படுகிறது. சமஸ்திதி என்றால் நிலையாக ஒரு திசையில் நின்று செய்வது என்று பொருள்படுகிறது.
இப்போது தடாசனம் செய்யும் முறையைப் பார்ப்போம். 
செய்யும் முறை : 
1. விரிப்பின் மீது 1/2 அடி அளவு இடைவெளிவிட்டு கால்களை வைத்து நிற்கவும்.
2. உங்களது உடல் எடை இரண்டு கால்களும் சமமாக தாங்கும் படி நேராக நிற்கவும்.
3. கைகளை பக்கவாட்டில் சாதாரணமாக விடவும். 
4. இப்போது மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து உள்ளங்கைகளை மேல் நோக்கி திரும்பி ஒன்று சேர்த்து நமஸ்காரம் செய்வது போல் வைக்கவும். 
5. கால் விரல்கள் மற்றும் முன் கால் பாகங்கள் உடல் எடையை தாங்குவது போன்ற நிலையில் 10 எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். கை முட்டியை வளைக்கக் கூடாது. நேராக இருக்க வேண்டும். 
4. மெதுவாக கைகளை பிரித்து உடம்பின் பின்பக்கம் கொண்டு வர வேண்டும். அதே சமயம் குதிகால்களை கீழ் நோக்கி கொண்டு வந்து விரிப்பின் மீது வைத்து தலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்த வேண்டும். 
5. அந்த நிலையில் 5 நிமிடம் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் தடாசன நிலைக்குச் செல்ல வேண்டும். 
6. இவ்வாறு மூன்று முறை செய்துவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும். 
பலன்கள் : 
இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் உடலும், மனதும் புத்துணர்வு பெறுகிறது.
இந்த ஆசனத்தை 18 வயது வரை செய்து வந்தால் உயரமாக வளர இவ்வாசனம் உதவும்.
கர்ப்பிணி பெண்கள், முதல் 6 மாதம் வரை இவ்வாசனத்தை செய்து பலன் பெறலாம்.
அதனால் சுகப்பிரசவம் உண்டாகும். குதிகால் வலியை போக்கும். ஞாபகசக்தி, மன ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. வளைந்த காலை உடையவர்கள் நேரே நிமிர்ந்த காலை அடையலாம்.
திருமணம் ஆகாத பெண்கள் இவ்வாசனத்தைப் பழகி வந்தால் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெறுவதற்கான அவயங்கள், கருப்பை, யோனி ஆகியவை ஏற்றம் அடையும்


வக்ராசனம்
உட்கார்ந்தபடியே செய்யும் இந்த யோகாசனம் வக்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.
தண்டாசன நிலையில் கால்களை நேராக நீட்டி அமரவும்.
வலது காலை முட்டி வரை மடக்கவும். பிறகு உள்ளங்காலை இடதுகால் முட்டிக்கு அருகில் இருத்தவும்.
(மூச்சு விடவும்) உடலின் நடுப்பகுதியை வலது புறமாக திருப்பவும் வலது தோளை மடக்கப்பட்ட வலது காலிற்கு வெளியே கொண்டு வரவும்.
வலது கையை ஆதரவிற்காக முதுகுக்குப்பின்னால் கொண்டு வருக.
முதுகெலும்பை நேராக நிமிர்த்தி இடது கையால் வலது கணுக்காலைப் பற்றவும்.
இடது கால் நீட்டியபடி இருக்கவேண்டும். கணுக்கால்கள் மேல் நோக்கி இருக்கவேண்டும்.
(மூச்சு விடவும்) உடலின் நடுப்பகுதியை அப்படியே வலதுபுறமாக மேலும் திருப்பவும் கழுத்தை திருப்பி உங்களுக்கு பின்புறமாக பார்வையை செலுத்தவும்

இதே நிலையில் உங்களால் முடிந்த வரை இருக்கவும்.
(மூச்சை உள்ளிழுக்கவும்) இப்போது கழுத்து மற்றும் உடலின் நடுப்பகுதிகளை முன்பக்கமாக திருப்பவும். கைகளை விடுவிக்கவும், கால்களை நீட்டவும்.

தண்டாசன நிலையில் அமரவும்.

பயன்கள்:
 
முதுகெலும்பை ஒழுங்குபடுத்தும் முதுகுத் தண்டெலும்புகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கும் சீரணத் தன்மையை அதிகரிக்கும். தோள்களை அகலமாக்கும்
கழுதுத் தசைகளுக்க்கு சிறந்த பயிற்சி அளிக்கும்.

எச்சரிக்கைகள்:
 
முதுகு, கழுத்து வலி இருக்கும்போது இந்த யோகாசனத்தை செய்வதாகாது.
கழுத்தெலும்பு அழற்சி உள்ளபோது செய்யக்கூடாது.